அவளுக்கு பின்னால் ஒரு மாபெரும் கண்ணாடி ஜன்னல். ஒரு தோட்டா அவளை நோக்கி பறந்தது. திரும்பி பார்க்காமல் பின்னால் எம்பி குதித்தாள்.
கண்ணாடி துகள்கள் அவளை சுற்றி தெறிக்க, வெளியே விழுந்தாள். நகரத்தின் விளக்குகள் வெளிச்சத்தாலான கோலங்கள் போல், நட்சத்திர தோட்டம் போல் அவள் தலைக்கு மேலே விரிந்தன. காற்றில் புரண்டு படுத்தாள். இப்பொழுது வானின் நட்சத்திரங்கள் அவள் தலைக்கு மேல். கைகளை விரித்தாள், பறவையின் சிறகுகள் போல், சில முறை அசைத்து பார்த்தாள். இன்னும் மேலே எம்பினாள்.
அந்த கட்டிடத்தின் முன் தோற்ற கண்ணாடி ஜன்னல்களில் அவளுடைய பிம்பங்கள் மேலே பறந்தன. அவள் இதை அழகு பார்க்க கட்டிடடத்தை பார்த்தபோது, ஒவ்வொரு ஜன்னலிலும் ஒரு நிலா. ஆயிரம் நிலவுகள். ஒரு பறவை கூட்டம் நிலவை சரி பாதியாக வெட்டி சென்றது. பறவைகளின் கறுப்பு நிழல்கள் கடந்ததும், மீண்டும் முழு வட்டமாக மாறியது நிலா.
உயரம். சில ஆந்தைகள் இவளைக் கண்டு கிறீச்சிட்டன. இவள் பதிலுக்கு கிறீச்சிட்ட வார்த்தைகளை காற்று பிய்த்துக்கொண்டு அதன் ஓலத்தில் அமுக்கி மறைத்தது. மெளனமாக மேலே பறந்தாள்.
நகரத்தின் விளக்குகள் தூரத்து மின்மினிகளாக தெரிந்தன. மேகங்கள் இரு புறமும் கீழ் விரைந்தன. முகத்தை கிழித்த காற்று கண்களில் நீர் பெருகச் செய்தது. பொங்கி எழுந்து, கன்னத்தில் பனித் துகளாய் உறைந்த கண்ணீரையும் அவள் முகத்தில் இருந்து பிய்த்துச்சென்றது. உயர்ந்தாள்.
அவள் கீழே எல்லா திசையிலும் பஞ்சு குவியல்களாக மேகங்கள். திடீரென்று கீழிருந்த மேகம் பிரகாசித்தது. ஒரு வினாடி ஒளிர்ந்தது. திடுக்கிடும் ஒலியாய் இடி இவள் கீழ் வெடித்தது. மழை பெய்வதன் சத்தமே இல்லை. நீர் இலையுடன், சுவருடன், மண்ணுடன் கூடும் இசை தான் மழை சத்தம் போலும். கீழே சென்று பார்த்து விட்டு, முழுவதுமாய் நனைந்து மேலே மீண்டு வந்தாள்.
காற்றில் ஆடைகளை உதறிவிட்டு மிதந்தாள்.
ennachu malar???
ReplyDeletekavidhai try madhiri theriyudhu, aana it sounds like "nananjufying" type english in certain parts of the post...
but a nice effort, good to read thamizh (can't figure how to get the font though) after a long time...
keep posting!!
கவிதை, கனவு, புனைவு - இவற்றிற்கு நடுவில் ஒன்று:) Why did you find some of it to be 'nananjufying' type of english? I'm curious to know...
ReplyDeletenot really y i felt so, although its perfectly tangible. u know u get a feeling of something in the language not rite while reading?? may be because of phrases like "ஆந்தைகள் இவளைக் கண்டு கிறீச்சிட்டன", "காற்று பிய்த்துக்கொண்டு", "அமுக்கி மறைத்தது".
ReplyDeletefrankly ive no idea if there's a better way to word them..
although im pretty slow in reading thamizh, i luv to read it. u shd write more often!!
Very insightful, Mani. Those are examples of English metaphors I have tried to translate literally into Tamil. And, yes, shall keep writing:)
ReplyDelete