அவள் பல நூற்றாண்டாக வாழ்ந்து வந்த ஊரு அவளுக்கு அந்நியமானது.
மழை காலத்தில் வெயில் அடித்தது. ஆட்டோ ஓட்டுனர்கள் அவளிடம் கனிவுடன் பேசினார்கள்.
வெயில் காலத்தில் மழை கொட்டியது. பறவைகள் தலை கீழாக பறந்து சென்றன.
மறுபடியும் தேர்வு எழுதியவளுக்கு, கணிதத்தில் ஆங்கிலத்தை விட அதிக மதிப்பெண்கள் கிடைத்தன.
சாலை கடப்பவர்க்கு வாகனங்கள் நின்று சென்றன.
மரங்களின் வளைவுகள் புதிதாகி விட்டன, கிளைகள் வெடித்து, தெறித்து வானத்தை அணைப்பது போல் விரிகின்றன.
இவளிடம் சில்லறை இல்லாத பாவத்துக்கு பஸ் கண்டக்டர் எரிஞ்சு விழவில்லை.
மலை சரிவின் வண்ணங்கள் அவள் கணினி மேல் வழிந்து ஓடின.
ரஜினி படத்திற்கு டிக்கெட் இரண்டாம் வாரமே கிடைத்தது.
விசித்திரம் தான்.
malar tell me the truth..isnt this post created for "ரஜினி படத்திற்கு டிக்கெட் இரண்டாம் வாரமே கிடைத்தது" alone??
ReplyDeleteநான் சொல்லுவதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் இல்லை. இந்த பதிவை நான் எழுதியதற்கு காரணங்கள் இவை தான்: ஒரு தேர்வில் நான் பெற்ற மதிப்பெண்கள், அதை முடித்து நான் பேருந்து பிடித்து சிட்டி சென்டர்க்கு செல்லும் போது கண்டக்டர் நிஜமாகவே எரிந்து விழ வில்லை, படத்திற்கு டிக்கெட் கிடைத்தது, அதற்க்கு பின் தான் ஆட்டோ டிரைவர் என்னிடம் கனிவாக, சிரித்து பேசிய அற்புதம் நடந்தது. பறவைகள் தலை கீழாக பறந்து செல்வது கூட எங்காவது நடந்திர்க்கலாம், யார்க்கு தெரியும்?
ReplyDeleteappadi nadandhirundhal mikka magizhchi malar!:-)
ReplyDelete